Thursday, May 26, 2011
சிவ சிவா!! (Siva Sivaa!!)
கருமை கதிர் வீசும் ஜடாமுடி
அதில் அழகே அமர்ந்துள்ள அரைதிங்கள்
நடராஜனுடன் இணைந்தாடும்,
மெல்லிடை கொண்டு,வளைந்து ஆடும்-
ஆகாச கங்கை!
ஞாயிறை இருதுண்டாக கொண்ட கண்கள்
அதன் மேல் ஞாயிறையும் சுட்டெரிக்கும் நெற்றிக்கண்.
ஆலகால நஞ்சை அமுதென அருந்தி
அண்டத்தை காத்த கருநீல சங்குடையான்.
கருநீல கொடியநஞ்சுடைய நாகத்தை
அணியாக அணிந்த மணிகண்டா
நீ என்னுள் சரி பாதி- உமையாளே
நான் உன்னுள் ஒரு பாதி
என பகுத்தறிவு ஊட்டிய வேதநாயகா
அண்டத்தை அழிக்கும் சர்வ சம்ஹாரா!
நீ என்னை அழித்து,
உன்னை என்னில் புகற்றி,
என்னை காப்பாய் ருத்ரநாதா!
நான் உன்னை சரணடைந்தேன் பரபிரம்மமே!!
The english font for people who cant read tamil!
Karumai kathir veesum jataamudi
Adhil azhage amarnthulla araithingal
Nataraajanudan inaindhaadum,
Mellidai Kondu,Valaindhu aadum,
Akaasa gangai
Gnaayirai iruthundaaga konda kannkal
Adhan mel gnaayiraiyum sutterikkum Netrikkann
Aalakaala nanjai amudhena arundhi
Andathai kaatra karuneela sangudaiyaan.
Karuneela kodiyananjudaiya naagathai
Aniyaaga anindha manigandaa
Nee ennul sari paadhi- Umaiyaale
Naan unnul oru paadhi
Ena pagutharivu oottiya Veda naayagaa
Andathai azhikkum Sarva Samhaara!!
Nee ennai azhithu,
Unnai ennil pugatri,
Ennai kappai Rudranadaa!
Naan unai saranadainthen parabrahmame!!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
WONDERFUL!!!
u wrote this tamil poem????namba mudiyala...!!!
Post a Comment