Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Thursday, May 26, 2011

சிவ சிவா!! (Siva Sivaa!!)


கருமை கதிர் வீசும் ஜடாமுடி
அதில் அழகே அமர்ந்துள்ள அரைதிங்கள்
நடராஜனுடன் இணைந்தாடும்,
மெல்லிடை கொண்டு,வளைந்து ஆடும்-
ஆகாச கங்கை!

ஞாயிறை இருதுண்டாக கொண்ட கண்கள்
அதன் மேல் ஞாயிறையும் சுட்டெரிக்கும் நெற்றிக்கண்.
ஆலகால நஞ்சை அமுதென அருந்தி
அண்டத்தை காத்த கருநீல சங்குடையான்.

கருநீல கொடியநஞ்சுடைய நாகத்தை
அணியாக அணிந்த மணிகண்டா

நீ என்னுள் சரி பாதி- உமையாளே
நான் உன்னுள் ஒரு பாதி
என பகுத்தறிவு ஊட்டிய வேதநாயகா

அண்டத்தை அழிக்கும் சர்வ சம்ஹாரா!
நீ என்னை அழித்து,
உன்னை என்னில் புகற்றி,
என்னை காப்பாய் ருத்ரநாதா!

நான் உன்னை சரணடைந்தேன் பரபிரம்மமே!!



The english font for people who cant read tamil!

Karumai kathir veesum jataamudi
Adhil azhage amarnthulla araithingal
Nataraajanudan inaindhaadum,
Mellidai Kondu,Valaindhu aadum,
Akaasa gangai

Gnaayirai iruthundaaga konda kannkal
Adhan mel gnaayiraiyum sutterikkum Netrikkann
Aalakaala nanjai amudhena arundhi
Andathai kaatra karuneela sangudaiyaan.

Karuneela kodiyananjudaiya naagathai
Aniyaaga anindha manigandaa

Nee ennul sari paadhi- Umaiyaale
Naan unnul oru paadhi
Ena pagutharivu oottiya Veda naayagaa

Andathai azhikkum Sarva Samhaara!!
Nee ennai azhithu,
Unnai ennil pugatri,
Ennai kappai Rudranadaa!

Naan unai saranadainthen parabrahmame!!

Monday, February 28, 2011

நண்பேன் டா!! (My Friend!!)

Just a small idea that stuck me... Dedicated to all my friends!! :D

பெயரை உரைத்தேன் நேரில் வந்தாய் - மறுகணமே;
துயரம் என்றேன் கை கொடுத்தாய் - உதவிக்கு;
கவலை என்றேன் தோள் கொடுத்தாய் - அழுவதற்கு;
உதவி கேட்டேன் உயிரை தந்தான் - என் நண்பன்!!

English translation:

I called your name and u appeared before me - Immediately;
When i was in sorrow u gave me a hand - To help;
When i was down u gave me a shoulder - To cry;
When i asked for a help u gave your life - My friend!!

Thursday, February 24, 2011

நெற்றிக்கண் நாயகன்!!


A tamil version of the same post - Netrikkann Nayagan!!

நள்ளிரவு நேரத்தில் , நடுநிசி இரவில் ;
நாய்கள் ஊளையிட , நரிகள் வேட்டையாட ;
தீமைகள் படைஎடுத்தாட, நன்மைகள் பயந்தோட ;
நிம்மதியை எரித்து , பயத்தை பெருக்கி ;
உணர்வுகளை அழித்து , உயிர்களை கசக்கி ;
ரத்தத்தை குடிக்க , உயிரினை எடுக்க ;
கர்வத்தை அழித்து , ஆணவத்தை ஒடுக்கி ;
உண்மையை நிலைநாட்ட , தீமையை விரட்ட ;
ருத்ர நீலகண்டன் , திருசூல நாதன் ;
அகில பிரம்மா நாயகன் ;
ஆதி அந்தம் இல்லா தருமுலவாசன்;
சினம்கொண்டு வெறி கொண்டு மண் மீது வருவான் ;
நெற்றிக்கண் திறந்து ஜகத்தினை அழிப்பான் !

Wednesday, February 23, 2011

Netrikann nayagan


Since this is my first tamil post please bear with me and do comment on the mistakes!!:)

Nalliravu nerathil, nadunisi iravil;
Naigal oolaiyida, narigal vettaiyada;
Theemaigal padayeduthada, Nanmaigal bayanthoda;
nimmadhiyai erithu, bayathai perukki;
unarvugalai azhithu, uyirgalai kasakki;
rathathai kudikka, uyirinai edukka;
garavathai azhithu, aanavathai odukki;
unmayai nilainaatta, theemayai viratta;
rudra neelakantan, tirusula nathan;
akila brahma nayagan;
aadhi andham illaa tharumulavasan;
sinamkondu veri kondu mann meethu varuvan;
netrikkann thirandhu jagathinai azhippan!